Friday, September 26, 2014

மறுமை நாள்

வானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.

யுகமுடிவு நாள், இறுதி நாள், ஸூர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.

பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும். நல்லவர்களுக்குப் பேரின்பம் கிடைக்கும். கெட்டவர்களுக்குத் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இராது.

மறுமை, மறு உலகம், அவ்வுலகம், தீர்ப்பு நாள், ஒன்று திரட்டப்படும் நாள், யாராலும் உதவ முடியாத நாள், திரும்பச் செல்லும் நாள், கூலி வழங்கும் நாள், விசாரிக்கப்படும் நாள், பயன் தரும் நாள், உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனைச் சந்திக்கும் நாள், கைசேதப்படும் நாள், இறைவன் முன் நிற்கும் நாள், தப்பிக்க இயலாத நாள், எழுப்பப்படும் நாள் இன்னும் பல பெயர்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.

சந்தேகம் இல்லாத நாள், மகத்தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள், எந்தச் சந்தேகமும் இல்லாத நாள் போன்ற சொற்கள் அழிக்கப்படும் நாளுக்கும், உயிர்ப்பிக்கப்படும் நாளுக்கும் பொதுவானவை.

அழிக்கப்படும் நாள், மீண்டும் உயிர்ப்பிக்கும் நாள் ஆகிய இரு நாட்களும் எப்போது ஏற்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும், ஏன் வானவர்களும் கூட அறிய மாட்டார்கள். அந்த நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும். (பார்க்க திருக்குர்ஆன் 7:187, 20:15, 33:63, 79:42)

இவ்வுலகில் மனிதன் நல்லவனாக வாழ இத்தகைய ஒரு நாளை நம்புவது பெரிதும் உதவும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.


கோழி, குதிரை போன்ற பிராணிகளைக் குர்பானி கொடுக்கலாமா?

நபி (ஸல்) அவர்கள் குர்பானி பிராணிகளாக ஆடு, மாடு,
ஒட்டகத்தையே வழிகாட்டியுள்ளார்கள். கோழி, குதிரை போன்ற
வேறு பிராணிகளை அவர்கள் கூறாததால் அவற்றைக்
குர்பானி கொடுக்க முடியாது.

குர்பானிக்காக வாங்கப்பட்ட ஆடு இடையில் இறந்துவிட்டால்


குர்பானிக்காக வாங்கப்பட்ட ஆடு இடையில் இறந்துவிட்டால் புதிதாக ஓர் ஆட்டை வாங்கி குர்பானி கொடுக்க வேண்டுமா? வசதியில்லாதவர் என்ன செய்ய வேண்டும்?


குர்பானி கொடுத்தால்தான் கடமை நீங்கும். கொடுப்பதற்கு முன்னர் இறந்துவிட்டால் வசதி இருந்தால் புதிதாக ஓர் ஆடு வாங்கி குர்பானி கொடுக்க வேண்டும். வாங்குவதற்கு வசதியில்லாவிட்டால் மாட்டில் கூட்டுக் குர்பானி கொடுக்கலாம். அதற்கும் வசதியில்லாவிட்டால் குர்பானி கொடுக்கத் தேவையில்லை. அல்லாஹ் யாரையும் அவரின் சக்திக்கு மீறி சிரமப்படுத்த மாட்டான்.

இறந்தவர் சார்பாக குர்பானி கொடுக்கலாமா?


இறந்தவர்கள் சார்பாக
குர்பானி கொடுப்பதற்கு சரியான ஹதீஸ்
ஆதாரம் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக்
காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன்
ஆதாரப்பூர்மான ஹதீசுடன் மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர
மற்ற எல்லாத் தொடர்புகளும்
துண்டிக்கப்பட்டு விடுகின்றன. 
அவை 
1. நிரந்தர தர்மம்.
2 .பயன்தரும் கல்வி 
3. தன் தந்தைக்காக துஆச் செய்யும்நல்ல குழந்தை 
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 3358

ரத்த குழாய் அடைப்பு



நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.

அலறவைக்கும் ஆஸ்துமா.. என்ன தீர்வு?



கரமயமாக்கலின் காரணமாக பல்கிப்பெருகியுள்ள நோய்களில், இன்றைய நிலையில் ஆஸ்துமாதான் முக்கியமான இடத்தில் உள்ளது. இரவு முழுவதும் உறங்க முடியாமல், மூச்சுவிடவே சிரமப்பட வைக்கும் ஆஸ்துமாவைப் பற்றித் தெரிந்து கொண்டால் முடிந்த வரையில் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.
ஆஸ்துமா என்றால் என்ன?

ஆஸ்துமா என்பது நுரையீரலைத் தாக்கக் கூடிய ஒரு நோய். சுவாசக் குழாயில் உள்ள தசைகள் வீங்கிப்போய், சுவாசிப்பதே சிரமமாக இருக்கும்.


ஆஸ்துமா எதனால் வருகிறது?
1. சிகரட் புகை 
2. கயிறு துகள், மரத்தூள் 
3. செல்லப் பிராணிகளின் முடி
4. சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசு
5. அடிக்கடி மாறும் காலநிலை
6. மன அழுத்தம்
7. வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை
8. சளித்தொல்லை
9. தும்மல் பிரச்னை
10. பரம்பரை காரணம் (குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் வரலாம்).



அறிகுறிகள்...
1. மூச்சு இளைத்தல் (வீசிங் பிரச்னை)
2. அடிக்கடி இருமுவது, தும்முவது போன்ற பிரச்னைகள்
3. முகம், உதடு ஊதா நிறத்தில் மாறுவது
4. அடிக்கடி, திடீரென ஏற்படும் சுவாசக் கோளாறு
5. பயம், பதட்டம் காரணமாக அடிக்கடி வியர்த்தல்
6. நெஞ்சுவலி
7. சீரற்ற இதயத் துடிப்பு



தீர்வு...
=> மருத்துவர் அறிவுரையோடு 'இன்ஹேலர் தெரப்பி' மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
=> சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம்.
=> சூடான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
=> தூசி இல்லாத இடத்தில் வசிக்க வேண்டும்.
=> குளிர்பானங்கள், ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
=> தொடர்ந்து அடிக்கடி உடல் நிலையைப் பரிசோதனை செய்து, மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.