Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Tuesday, January 13, 2015

பண்டிகை காலங்களில் பூஜை செய்யாத உணவை மாற்று மத சகோதரர்கள் கொடுத்தால் அதை சாப்பிடலாமா?

சாமிக்குப் படைக்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதற்குத் தான் தடை உள்ளது. படைக்கப்படாத பொருட்களை சாப்பிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. மாற்று மதத்தினர் எல்லோருமே சாமிக்குப் படைப்பதற்காக உணவுகளைத் தயாரிப்பது கிடையாது. அந்த நாளில் சந்தோஷமாக இருப்பதற்காக பலகாரங்கள் தயாரித்து அதை நண்பர்களுக்கு வழங்குவார்கள். இந்த அடிப்படையில் இருந்தால் அதை சாப்பிடுவதில் தவறில்லை.

இம்சை தரும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்

குழந்தைகளுக்கான நூடுல்ஸ் விளம்பரங்கள் நிறைய நிறைய. இன்னொரு பக்கம், விதவிதமான வடிவங்கள், ஃப்ளேவர்கள் என நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்குகின்றன. விளைவு... கிராமத்துக் குழந்தைகள் வரை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் நூடுல்ஸ்!



இரண்டே நிமிடத்தில் ரெடி!’ என்பதையே பிரதான பிளஸ் பாயின்டாகக் கொண்டுள்ள இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், நம் வயிற்றில் செரிக்க எத்தனை மணி நேரம் ஆகிறது என்பது, அதிர்ச்சித் தகவல்!


மஸாச்சுசெட்ஸ் ஜெனரல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர். பிரேடன் குவோ, இதுகுறித்து ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினார். ஒருவரை பிரபலமான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட வைத்து, உடனேயே மாத்திரை வடிவிலான கேமரா ஒன்றை அவரை விழுங்கச் செய்தார். கேமரா குடலுக்குச் சென்றதும் அங்கு நூடுல்ஸ் செரிக்கும் புராசஸ், இங்கே வெளியே மானிட்டரில் தெரிகிறது.



சாதாரணமாக, வீட்டில் தயாரிக்கும் நூடுல்ஸ் நம் வயிற்றில் 20 நிமிடங்களில் ஜீரணிக்கப்பட்டு விடும். ஆனால் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், இரண்டு மணி நேரம் கழித்தும் பாதியளவே ஜீரணிக்கப்படுகிறது. செரிமானத்திலேயே இவ்வளவு சிக்கல் என்றால், அது ஏற்படுத்தும் விளைவுகள் அச்சம் கொள்ள வைக்கின்றன! 

Sunday, January 11, 2015

சிக்கனுடன் எதற்கு எலுமிச்சை...?

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது என்பது முன்னோர்களின் அனுப அறிவு.
உலகின் வல்லரசு நாங்கள் என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாடுகள் உருவாகும் முன்பே... தமிழ் மண்ணில் நாகரீகமும், வாழ்வியல் முறையும் ஓங்கி உயர்ந்திருந்தது. காலையில் பல் துலக்குவதில் தொடங்கி, படுக்கைக்கு செல்லும் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு விஷயத்தையும் பரிசோதித்து பார்த்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
சாதாரண ரசம் வைப்பதை கூட பல ஆண்டுகள், பல வகைகளில் செய்து பார்த்து, அதற்கு முழுவடிவம் கொடுத்திருப்பார்கள். இன்று எல்லாமே அவசர கதியில் செய்கிறோம். நாம் சாப்பிடும் உணவுக்குக் கூட ‘ஃபாஸ்ட் ஃபுட்’ என்று பெயர் வைத்துள்ளோம். இதனால், நம் தட்டில் எவ்வளவு சுவையான உணவு பரிமாறினாலும், அள்ளிக் கொட்டிக் கொள்வதால், அதன் ருசியும் பலனும் முழுமையாக தெரிவதில்லை. சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதை சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறோம். ஏன் அப்படி சொன்னார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறோமா? பேசாமல் சாப்பிட்டால், நன்றாக மென்று உண்ண முடியும். அதனால்தான் ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்று தமிழ் பாட்டி சொல்லி வைத்தாள். 

Saturday, September 27, 2014

நாவல்பழம்-மூலநோயை தடுக்கும்


பழங்கள் மனிதனுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருபவை. நோய்கள் அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை. பழங்கள்  நாவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுத்து உடலுக்கு வலுவையும் கொடுக்கிறது. இந்த வகையில் நாவல்பழத்தின் மருத்துவ பயன்களை பற்றி  அறிந்து கொள்வோம். நாவல்பழத்தின் பயன்பாடு அவ்வையார் காலத்தில் இருந்தே வந்திருப்பதை பல புராண கதைகள் மூலம் நாம் அறிந்திருப்போம்.  நாவலில் கொடிநாவல், குழிநாவல், கருநாவல், சம்புநாவல், நாட்டு நாவல் என பல வகைகள் உள்ளன.

ஏரிக்கரைகளிலும், கண்மாய், குளக்கரையிலும் நாவல்மரம் பெரிதாக வளர்ந்திருக்கும். தற்போது நவீன தொழில் நுட்பத்தால் நாவல்பழம் பெரியதாகவும்,  அதிகமாகவும் விளைவிக்கப்படுகிறது. நாவல் மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவ பயன் கொண்டவை. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ்,  இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சிறப்பம்சமாக இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது. நாவல்பழத்தின் துவர்ப்பு சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும். 

ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் ரத்தத்தின் கடின தன்மை மாறி இலகுவாகும். மேலும் ரத்தத்தில் கலந்துள்ள ரசாயன வேதி  பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும் சக்தி நாவல்பழத்துக்கு உண்டு. மேலும் மலச்சிக்கலை  போக்கும். மூலநோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலநோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த  நாவல்பழத்தை உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக்கோளாறுகளை போக்கி குடல்தசைகளை வலுவடைய செய்யும் சக்தி நாவல்பழத்துக்கு உண்டு. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள்,  நாவல்பழத்தை மதிய உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டு  வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையை பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை தணிக்கும்.  ஞாபக சக்தியை அதிகரிக்கும். நாவல் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் காய வைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு  தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். சர்க்கரை  நோய் கட்டுப்படும். 

Friday, September 26, 2014

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

பெயரில் மட்டுமல்ல, குணத்திலும் இனிமையானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு. டயட் செய்கிறவர்கள், நீரிழிவுக்காரர்கள் போன்றோருக்கு கூடவே கூடாது  என அறிவுறுத்தப்படுகிற பட்டியலில் முதலிடம் கிழங்கு வகையறாக்களுக்கே. சர்க்கரைவள்ளிக் கிழங்கு மட்டும் விதிவிலக்கு. அப்படியா என  அதிசயிக்கிற வர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன் அடுத்தடுத்து சொல்லப் போகிற தகவல்கள் நிச்சயம் வியப்பைக் கூட்டும்.



என்ன இருக்கிறது? (100 கிராமில்)

ஆற்றல்          86 கிலோ கலோரி 
கொழுப்பு          0
கொலஸ்ட்ரால்  0
சோடியம்          55 மி.கி.
பொட்டாசியம்   337 மி.கி.
நார்ச் சத்து      3 கிராம்
சர்க்கரை          4.2 கிராம்
புரதம்          1.6 கிராம்

‘‘மாவுச் சத்து நிறைந்த வேர் காய்கறியான சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஃப்ளாவனாயிட்ஸ், ஆன்ட்டி ஆக்சிடன்ட், தாதுச் சத்து, நார்ச் சத்து நிறைந்தது.  வெப்பமான பகுதிகளில் விளையக்கூடிய இது, பல நிறங்களில் விளைகிறது.  மாவுச் சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இது  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும் என்பதால் நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள்கூட குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு  வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளதால் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும்  செயல்படுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாடுகளுக்கும் நல்லது.


நுரையீரல் மற்றும் தொண்டை புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற  உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளன. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும். கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின்  கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளன.



இன்னும் என்ன சிறப்பு?



100 கிராம் கிழங்கில் இருப்பது வெறும் 86 கலோரிகள் மட்டுமே. தவிர, அறவே கொழுப்பற்றது என்பது கூடுதல் சிறப்பம்சம். உருளைக்கிழங்கில்  இருப்பதைவிட, சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அமிலேஸ் அளவு அதிகம். அமிலேஸ் என்பது ரத்தத்தில் சர்க் கரையின் அளவை மிக மெதுவாக  அதிகரிக்கக் கூடியது. அத்தியாவசிய வைட்டமின்களான பேன்ட்டோதெனிக் அமிலம், பைரிடாக்சின், தையாமின், நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின்  ஆகியவற்றை அபரிமிதமாகக் கொண்டது. உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு அவசியம் தேவைப்படுபவை இவை.



சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்றவையும் போதுமான அளவில் உள்ளன. இதில் உள்ள ஆன்த்தோசயானிடின்ஸ், ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் மூன்றும் காயங்களை ஆற்றும் குணம் கொண்டவை.  இவற்றில் ஆன்த்தோசயானிடின்ஸுக்கு வயிறு, கழுத்து, நுரையீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்குக் காரணமான செல் வளர்ச்சியைக்  கட்டுப்படுத்தும் குணமும் உண்டு. 



ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்வதையும் ரத்தம் உறைவதையும் தடுக்கும் குணமும் இந்தக் கிழங்கில் உண்டு.  அதன் தொடர்ச்சியாக இதய நோய்கள் வரும் அபாயங்களும் குறையும்.