Wednesday, December 24, 2014
Saturday, September 27, 2014
வினிகர் பயன்படுத்தலாமா
வினிகர்,
சிர்கா காடி எனப்படும் பொருளைப் பயன்படுத்தலாமா? அதில் பாக்டீரியாக்கள் உள்ளனவே? அது
ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கபடுகிறதே

பதில் :
வினிகர் என்று கூறப்படும் காடியைப்
பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
இதை உணவாக உட்கொண்டுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
3824
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ
عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ أَهْلَهُ الْأُدُمَ فَقَالُوا مَا عِنْدَنَا
إِلَّا خَلٌّ فَدَعَا بِهِ فَجَعَلَ يَأْكُلُ بِهِ وَيَقُولُ نِعْمَ الْأُدُمُ
الْخَلُّ نِعْمَ الْأُدُمُ الْخَلُّ رواه مسلم
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள் :
(ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்
வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், "நம்மிடம் காடி மட்டுமே உள்ளது'' என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
காடியைக் கொண்டு வரச் சொல்லி அதை(த் தொட்டு)க்கொண்டு உண்ணலானார்கள். மேலும், "குழம்புகளில் அருமையானது காடியாகும்'' என்று சொன்னார்கள்.
முஸ்லிம் (4169)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள் :
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது
கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்)
அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
"குழம்பேதும்
இல்லையா?'' என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "காடி தான் குழம்புகளில் அருமையானது'' என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள், "இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு
கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க்
கொண்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (4170)
வினிகர் என்பது புளிப்பான ஒரு பொருள். இதில் பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கூறினீர்கள். நாம்
உண்ணும் எத்தனையோ பொருட்களில் பாக்டீரியாக்கள் இருக்கத் தான் செய்கின்றன. தண்ணீர்,
அரைத்த மாவு, தயிர் போன்ற பொருட்களில் பாக்டீரியாக்கள் இருக்கின்றன.
பாக்டீரியாக்களால் தான் பால் தயிராகவும் மாவு புளிக்கவும் செய்கின்றது. இந்த வகை
பாக்டீரியாக்களால் உடலுக்குப் பாதிப்பு இல்லை என்பதால் இதை உண்ணுவது தவறல்ல.
வினிகரில் உள்ள பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படுவதாக யாரும் கூறவில்லை.
மனித ஷைத்தான்கள்
திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ ஷைத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அதை நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
நேரடிப் பொருள் கொள்வது திருக்குர்ஆனின் மற்ற வசனங்களுக்கோ, நபிமொழிகளுக்கோ, இஸ்லாத்தின் அடிப்படைக்கோ முரணாக இருந்தால் அப்போது ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அது போல் முன்பின் வாசக அமைப்பு நேரடிப் பொருள் கொள்ள இடம் தராவிட்டால் அப்போதும் கெட்ட மனிதர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவர் தான் ஷைத்தான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 3275
தொழுது கொண்டிருக்கும் போது குறுக்கே செல்லும் மனிதர்களை ஷைத்தான்கள் என்று இந்தச் செய்தியில் நபிகளார் குறிப்பிடுகிறார்கள்.
இந்தக் கருத்தில் திருக்குர்ஆனில்
2:14, 2:102, 6:112 ஆகிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
முன்னர் அருளப்பட்டவை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வேதம் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன.
நபிகள் நாயகத்துக்கு மட்டும் தான் வேதம் அருளப்பட்டது என எண்ணக் கூடாது. ஒவ்வொரு தூதருக்கும் அவரவரின் மொழியில் வேதங்கள் அருளப்பட்டன.
வேதங்களைக் குறித்து முஸ்லிம்களிடம் சில தவறான நம்பிக்கைகள் உள்ளன.
"தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்கள் மட்டுமே இறைவனால் வழங்கப்பட்டுள்ளன'' என்பதும் அந்தத் தவறான நம்பிக்கையில் ஒன்றாகும்.
தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களின் பெயர்கள் மட்டுமே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதால் இந்தத் தவறான எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.
எல்லா இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
(பார்க்க : திருக்குர்ஆன் 2:213, 14:4, 19:12, 57:25,
87:18,19)
முன்னர் அருளப்பட்ட வேதங்களை நம்புவது என்றால் அவற்றை நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. "முஹம்மது நபிக்கு மட்டும் தான் வேதம் அருளப்பட்டது; அதற்கு முன் எவருக்கும் அருளப்படவில்லை'' என எண்ணாமல் "எல்லா இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன'' என்று நம்ப வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
ஏனெனில் முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் "அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன; மாற்றப்பட்டன; மறைக்கப்பட்டன; திருத்தப்பட்டன'' எனப் பல இடங்களில் கூறுகிறது.
(பார்க்க : திருக்குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13,
5:41)
திருக்குர்ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த ஒரு வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்ப வேண்டும்.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:4, 4:60, 4:136, 4:162, 5:59, 10:94)
Subscribe to:
Posts (Atom)