Tuesday, January 13, 2015

இம்சை தரும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்

குழந்தைகளுக்கான நூடுல்ஸ் விளம்பரங்கள் நிறைய நிறைய. இன்னொரு பக்கம், விதவிதமான வடிவங்கள், ஃப்ளேவர்கள் என நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்குகின்றன. விளைவு... கிராமத்துக் குழந்தைகள் வரை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் நூடுல்ஸ்!



இரண்டே நிமிடத்தில் ரெடி!’ என்பதையே பிரதான பிளஸ் பாயின்டாகக் கொண்டுள்ள இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், நம் வயிற்றில் செரிக்க எத்தனை மணி நேரம் ஆகிறது என்பது, அதிர்ச்சித் தகவல்!


மஸாச்சுசெட்ஸ் ஜெனரல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர். பிரேடன் குவோ, இதுகுறித்து ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினார். ஒருவரை பிரபலமான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட வைத்து, உடனேயே மாத்திரை வடிவிலான கேமரா ஒன்றை அவரை விழுங்கச் செய்தார். கேமரா குடலுக்குச் சென்றதும் அங்கு நூடுல்ஸ் செரிக்கும் புராசஸ், இங்கே வெளியே மானிட்டரில் தெரிகிறது.



சாதாரணமாக, வீட்டில் தயாரிக்கும் நூடுல்ஸ் நம் வயிற்றில் 20 நிமிடங்களில் ஜீரணிக்கப்பட்டு விடும். ஆனால் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், இரண்டு மணி நேரம் கழித்தும் பாதியளவே ஜீரணிக்கப்படுகிறது. செரிமானத்திலேயே இவ்வளவு சிக்கல் என்றால், அது ஏற்படுத்தும் விளைவுகள் அச்சம் கொள்ள வைக்கின்றன! 

Sunday, January 11, 2015

சிக்கனுடன் எதற்கு எலுமிச்சை...?

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது என்பது முன்னோர்களின் அனுப அறிவு.
உலகின் வல்லரசு நாங்கள் என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாடுகள் உருவாகும் முன்பே... தமிழ் மண்ணில் நாகரீகமும், வாழ்வியல் முறையும் ஓங்கி உயர்ந்திருந்தது. காலையில் பல் துலக்குவதில் தொடங்கி, படுக்கைக்கு செல்லும் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு விஷயத்தையும் பரிசோதித்து பார்த்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
சாதாரண ரசம் வைப்பதை கூட பல ஆண்டுகள், பல வகைகளில் செய்து பார்த்து, அதற்கு முழுவடிவம் கொடுத்திருப்பார்கள். இன்று எல்லாமே அவசர கதியில் செய்கிறோம். நாம் சாப்பிடும் உணவுக்குக் கூட ‘ஃபாஸ்ட் ஃபுட்’ என்று பெயர் வைத்துள்ளோம். இதனால், நம் தட்டில் எவ்வளவு சுவையான உணவு பரிமாறினாலும், அள்ளிக் கொட்டிக் கொள்வதால், அதன் ருசியும் பலனும் முழுமையாக தெரிவதில்லை. சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதை சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறோம். ஏன் அப்படி சொன்னார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறோமா? பேசாமல் சாப்பிட்டால், நன்றாக மென்று உண்ண முடியும். அதனால்தான் ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்று தமிழ் பாட்டி சொல்லி வைத்தாள். 

Saturday, September 27, 2014

வினிகர் பயன்படுத்தலாமா

வினிகர், சிர்கா காடி எனப்படும் பொருளைப் பயன்படுத்தலாமா? அதில் பாக்டீரியாக்கள் உள்ளனவே? அது ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கபடுகிறதே


பதில் :
வினிகர் என்று கூறப்படும் காடியைப் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை உணவாக உட்கொண்டுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

3824 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ أَهْلَهُ الْأُدُمَ فَقَالُوا مَا عِنْدَنَا إِلَّا خَلٌّ فَدَعَا بِهِ فَجَعَلَ يَأْكُلُ بِهِ وَيَقُولُ نِعْمَ الْأُدُمُ الْخَلُّ نِعْمَ الْأُدُمُ الْخَلُّ رواه مسلم

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
(ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், "நம்மிடம் காடி மட்டுமே உள்ளது'' என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காடியைக் கொண்டு வரச் சொல்லி அதை(த் தொட்டு)க்கொண்டு உண்ணலானார்கள். மேலும், "குழம்புகளில் அருமையானது காடியாகும்'' என்று சொன்னார்கள்.
முஸ்லிம் (4169)

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "குழம்பேதும் இல்லையா?'' என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லைசிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "காடி தான் குழம்புகளில் அருமையானது'' என்று கூறினார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள், "இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (4170)

வினிகர் என்பது புளிப்பான ஒரு பொருள். இதில்  பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கூறினீர்கள். நாம் உண்ணும் எத்தனையோ பொருட்களில் பாக்டீரியாக்கள் இருக்கத் தான் செய்கின்றன. தண்ணீர், அரைத்த மாவு, தயிர் போன்ற பொருட்களில் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. பாக்டீரியாக்களால் தான் பால் தயிராகவும் மாவு புளிக்கவும் செய்கின்றது. இந்த வகை பாக்டீரியாக்களால் உடலுக்குப் பாதிப்பு இல்லை என்பதால் இதை உண்ணுவது தவறல்ல. வினிகரில் உள்ள பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படுவதாக யாரும் கூறவில்லை.